செய்திகள்

கைவிடப்பட்டது இளையராஜா – பாரதிராஜா கூட்டணி படம்

3rd Jan 2021 08:04 PM

ADVERTISEMENT

 

சென்னை: இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் உருவாகவிருந்த ‘ஆத்தா’ திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

‘இயக்குநர் இமயம்’ பாராதிராஜா இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளையராஜா இசையில் ’ஆத்தா’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபட்டு வந்தது.

இந்நிலையில் ‘ஆத்தா’ திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

ADVERTISEMENT

இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் இனிய தமிழ் மக்களே. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.

காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது..

புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT