செய்திகள்

பெண் குழந்தைக்குத் தாய் ஆனார் நடிகை பூஜா குமார்

2nd Jan 2021 01:26 PM

ADVERTISEMENT

 

கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

2000-ம் ஆண்டு காதல் ரோஜாவே என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார். இதன்பிறகு ஹிந்தி, மலையாளம், ஆங்கிலப் படங்களில் நடித்தார். 2013-ல் கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் பெண் குழந்தைத் தாயாகியுள்ளார் பூஜா குமார். ஜாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ஜோஷி, கையில் குழந்தையுடன் பூஜா குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எழுதியதாவது:

ADVERTISEMENT

ஒரு காலத்தில் நாங்கள் இருவராக இருந்தோம். இப்போது மூவராக உள்ளோம். பூஜாவும் நானும் எங்களுடைய குழந்தை நாவ்யா ஜோஷியை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். என்னுடைய பிறந்த நாளுக்குச் சிறந்த பரிசை பூஜா அளித்துள்ளார் என்றார்.

Tags : pooja kumar mom
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT