ஜெயம் ரவியின் 28-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், ஜனகனமண ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் 28-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் ஜெயம் ரவியின் புதிய படத்தை ‘பூலோகம்' கல்யாண் கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
ADVERTISEMENT