செய்திகள்

தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2: அறிவித்தார் செல்வராகவன்

2nd Jan 2021 10:20 AM

ADVERTISEMENT

 

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். 

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கி இன்னும் வெளிவராத நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரு படங்களுக்கும் யுவன் தான் இசை. 

இந்நிலையில் தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என செல்வராகவன் ட்வீட் செய்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆயிரத்தின் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 

இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு... இதோ உங்கள் முன்னால் என்று ட்வீட் செய்து ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும் படம் 2024-ல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தப் படம் பற்றி தனுஷ் ட்வீட் செய்ததாவது: பிரமாண்டமான படம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்கே ஒரு வருடம் தேவைப்படுகிறது. செல்வராகவனின் கனவுப் படம் இது. காத்திருத்தல் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்குத் தகுதியான படமாக உருவாக்கித் தருவோம். இளவரசன் 2024-ல் மீண்டும் வருகிறான் என்றார்.  

Tags : Dhanush Aayirathil Oruvan 2
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT