ஜுங்கா படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக ஹெலன் என்கிற மலையாளப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
2019-ல் வெளியான ஹெலன் மலையாளப் படத்தை மாதுகுட்டி சேவியர் இயக்கியிருந்தார். அன்னா பென், லால் நடித்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.
ஹெலன் தமிழ் ரீமேக்குக்கு அன்பிற்கினியாள் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னா பென் வேடத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - ஜாவித் ரியாஸ்.
ADVERTISEMENT
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.