செய்திகள்

நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை!

22nd Feb 2021 11:24 AM

ADVERTISEMENT

 

நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள். 

2-வது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக கரீனா கபூரும் சயிப் அலி கானும் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் தெரிவித்தார்கள்.  

ADVERTISEMENT

இந்நிலையில் கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி சயிப் அலி கான் கூறியதாவது:

எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி  என்றார். 

நடிகர் ஆமிர் கானின் அடுத்த படமான லால் சிங் சத்தா-வில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கரீனா கபூர். 

Tags : Kareena Kapoor Saif Ali Khan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT