செய்திகள்

வெங்கடேஷ் நடிப்பில் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கை இயக்கும் ஜீத்து ஜோசப்

22nd Feb 2021 12:20 PM

ADVERTISEMENT

 

த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கை வெங்கடேஷ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான மலையாளப் படம் - த்ரிஷ்யம்.

கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். 

ADVERTISEMENT

ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 மலையாளப் படம் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், பிப்ரவரி 19 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் த்ரிஷ்யம் 2-வின் தெலுங்கு ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். தெலுங்கு த்ரிஷ்யம் முதல் பாகத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா போன்றோர் நடித்திருந்தார்கள். நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார். 

த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Tags : Jeethu Joseph Drishyam 2
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT