செய்திகள்

தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

14th Feb 2021 08:40 PM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் முதல் பார்வை காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் 'கர்ணன்' வெளியாகும் என்றும் படக்குழு இந்த முதல் பார்வை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT