செய்திகள்

கரோனா சிகிச்சையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் சூர்யா

11th Feb 2021 04:57 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா வியாழனன்று வீடு திரும்பியுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு கடந்த ஆம் தேதியன்று கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா வியாழனன்று வீடு திரும்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT