செய்திகள்

யுவன் சங்கர் ராஜா அளித்துள்ள வலிமை அப்டேட்!

10th Feb 2021 04:17 PM

ADVERTISEMENT

 

வலிமை படத்தின் தொடக்கப் பாடல் குறித்து தன்னுடைய இணையத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் பாடல்கள் பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தன்னுடைய இணையத்தளத்தில் யுவன் கூறியுள்ளதாவது:

வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் தொடக்கப் பாடலை முடித்துள்ளோம். குத்துப் பாடல் பாணியில் அமைந்துள்ள அப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஒடிஷாவிலிருந்து திருவிழா டிரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பாடலைப் பதிவு செய்துள்ளோம். இது ஒரு சரியான ஜனரஞ்சகப் பாடலாக இருக்கும். இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார் என்று வலிமை படத்தின் பாடல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

8-வது முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன். 

ADVERTISEMENT
ADVERTISEMENT