செய்திகள்

’மின்னல் முரளி’ புதிய சாதனை

30th Dec 2021 07:07 PM

ADVERTISEMENT

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2-ல் வில்லனாக நடித்திருந்தார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘கள’ ‘காணேகாணே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த‘மின்னல் முரளி’ திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

நெட்பிளிக்ஸில் வெளியான அத்திரைப்படம் 2021-ன் சிறந்த மலையாளத் திரைப்பட ஐஎம்டிபி வரிசையில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. முதலிடம் த்ரிஷ்யம்-2. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT