'ஜெய் பீம்' படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் குறிப்பிட்ட சாதிக்கு எதிராக சித்திரிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இருப்பினும் மற்றொருபுறம் இந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தப் படம் முதலில் சிறிய முதலீட்டில் தயாராகவிருந்ததாகவும், இந்தப் படத்தில் சூர்யாவின் வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகும் பின்னரே அந்தப் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை சமீபத்தில் ஓவியர் டிராட்ஸ்கி மருது சமீபத்தில் ஒரு நிகழ்வில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிக்க | திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா: கேக் வெட்டிக் கொண்டாட்டம்
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.