செய்திகள்

'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

7th Dec 2021 03:26 PM

ADVERTISEMENT

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா’.

கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை 3டியில் வெளியிட இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று முடிந்ததை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தார்கள்.

தற்போது இப்படம் வருகிற 2022, பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

Tags : Sudeep vikrandh rona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT