செய்திகள்

''நான் உடைந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன்'': விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

7th Dec 2021 05:54 PM

ADVERTISEMENT

 

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர்.  இவர்களது பிரிவு குறித்து பல்வேறு யூகங்கள் வலம் வந்தன. ஆனால் இருவரும் வெளிப்படையாக பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில்  ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து சமந்தா மனம் திறந்துள்ளார். அதில், நான் மிகவும் பலவீனமான பெண் என்று நினைத்தேன். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் உடைந்து, இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது நான் தைரியமான பெண்ணாக இருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | நடிகை கத்ரீனா - விக்கி திருமணத்துக்கு எதிராக வழக்கு

ADVERTISEMENT

நடிகை சமந்தா தற்போது புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் யசோதா மற்றும் தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என தொடர்ந்து நடித்து வருகிறார். 

Tags : Samantha Naga Chaitanya Divorce Pushpa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT