செய்திகள்

நடிகை கத்ரீனா - விக்கி திருமணத்துக்கு எதிராக வழக்கு

7th Dec 2021 05:21 PM

ADVERTISEMENT

 

ஹிந்தி திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப்பும், விக்கி கவுசலும் வருகிற 9 ஆம் தேதி ராஜஸ்தானில் பார்வரா கோட்டையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். 

இந்த நிலையில் கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசலின் திருமணத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நேத்ரபிந்து சிங் ஜடுன் என்பவர் இருவர் மீது மட்டுமல்லாமல் விடுதி மேலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிற கோவில் பாதை மூடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்காக கோவிலை திறந்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள்

ADVERTISEMENT

இந்த நிலையில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தற்போது ராஜஸ்தானின் சவாய் மதோபூர் மாவட்டத்தில் உள்ள பர்ராஎன்ற உருக்கு சென்றுள்ளனர்.  மேலும் இருவரது திருமணத்தில் பங்கேற்க ஹிந்தி திரையுலக பிரபலங்கள் ஜெய்பூர் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். 

Tags : Katrina Kaif Vicky Kaushal Marriage Bollywood Rajasthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT