செய்திகள்

சர்ச்சைக்குரிய கதையை இயக்கும் சசிகுமார் ?

4th Dec 2021 01:12 PM

ADVERTISEMENT

 

ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்களை குற்றப் பரம்பரையாக அறிவித்தனர். இதன் காரணமாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இதனை அடிப்படையாகக் கொண்டு வேல ராமமூர்த்தி 'குற்றப்பரம்பரை' என்ற பெயரில் ஒரு நாவல் எழுதியிருந்தார். 

சில வருடங்களுக்கு முன் இந்த நாவலை படமாக்குவது தொடர்பாக இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலாவுக்கு இடையே பெரும் பிரச்னை உருவானது. இந்த நிலையில் இருவரும் அந்த நாவலை படமாக்குவதை கைவிட்டனர். 

இதையும் படிக்க | திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன்.ஜியின் அடுத்தப் படம் ? : வெளியான தகவல்

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்த நாவலை சசிக்குமார் திரைப்படமாக இயக்கவிருக்கிறாராம். இதற்கான திரைக்கதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சசிக்குமார் இயக்குநராக அறிமுகமான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு தனது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படம் எடுக்க இந்தப் படம் தான் தூண்டுகோலாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். ஈசன் படத்துக்கு பிறகு எந்தப் படத்தையும் சசிகுமார் இயக்கவில்லை. அவர் மீண்டும் திரைப்படம் இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 
 

Tags : Sasikumar Bala Bharathiraja Bharathi Raja Kutraparamabarai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT