செய்திகள்

திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன்.ஜியின் அடுத்தப் படம் ? : வெளியான தகவல்

4th Dec 2021 11:00 AM

ADVERTISEMENT

 

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மோகன்.ஜி. நீண்ட இடைவேளைக்கு பிறகு 'திரௌபதி' படத்தை இயக்கினார். இந்தப் படம் சாதி ரீதியாக பிற்போக்குத் தனமான கருத்துக்களை பேசியதாக பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பற்றி தவறான புரிதலை கொண்டிருப்பதாக பெரிதும் விவாதத்துக்குள்ளானது. இவர் இயக்கிய 3 படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தன. ஆனால் சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன.

இதையும் படிக்க | மீண்டும் சினிமா கதாநாயகனாகும் வானத்தைப் போல சீரியல் நடிகர்

ADVERTISEMENT

மேலும் மோகன்.ஜி இயக்கிய 3 படங்களிலும் ரிச்சர்டு ரிஷியே கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்திலும் அவரே கதாநாயகனாக நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் மோகன்.ஜி தனது அடுத்தப் படம் குறித்து சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ''எனது அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பு இன்று மாலை 6.40 மணிக்கு வருகிறது. என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : Mohan G Mohan Draupathi Rudra Thandavam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT