செய்திகள்

மீண்டும் சினிமா கதாநாயகனாகும் வானத்தைப் போல சீரியல் நடிகர்

3rd Dec 2021 05:04 PM

ADVERTISEMENT

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் தமன் குமார்.  இவர் ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை 2, அச்சமின்றி, தொட்டால் தொடரும் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். 

ஆனால் இந்தப் படங்கள் போதிய வெற்றியைக் கொடுக்காததால், தமனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து சன் டிவியில் வானத்தைப் போல தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது. 

இதையும் படிக்க | 'டாக்டர்', 'மாநாடு' படங்களுக்கு நடுவில், சத்தமில்லாமல் ஆர்யா படம் செய்த சாதனை

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது கண்மணி பாப்பா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீமணி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம் புலி, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tags : Vaanathai Pola Sun TV Thaman Kumar Thaman Kanmani Papa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT