செய்திகள்

வெள்ள நிவாரணத் தொகை அறிவித்த சினிமா பிரபலங்கள்

3rd Dec 2021 12:34 PM

ADVERTISEMENT

 

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், தஞ்சாவூர் போன்ற பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் ஆந்திராவில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தப்பூர் ஆகிய கனமழை பெய்தது. இதனால் உருவான வெள்ளத்தால் சில உயிரிழப்புகளும் நேர்ந்தன. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நிவாரணத்தொகை அறிவித்தனர். 

ADVERTISEMENT

 

இதையும் படிக்க | அன்பை பரிமாறிக்கொண்ட சிம்புவும், கீர்த்தி சுரேஷும் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆந்திர பகுதிகளில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்புகளை அறிந்து துயருற்றேன். நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக என் சார்பாக ரூ.25 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் ஜுனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த வெள்ள பாதிப்பில் இருந்து ஆந்திர மக்கள் மீண்டு வர என்னால் இயன்ற சிறு முயற்சியாக ரூ.25 லட்சத்தை வழங்குகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : Andhra Pradesh Andhra Flood Rain Relief Fund Chiranjeevi Jr NTR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT