செய்திகள்

கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்: படத்தை பாதியில் நிறுத்திய ஆஸ்திரலிய திரையரங்கம்: வெளியான விடியோ

3rd Dec 2021 03:03 PM

ADVERTISEMENT

 

ஒருபுறம் தமிழக அளவில் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்கள் கலாய்க்கப்பட்டாலும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அவரது படங்களுக்கென வெறிபிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் வெளியான வினய விதேய ராமா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. மேலும் இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் வெளியாகிருக்கிறது அகாண்டா. பாலகிருஷ்ணாவும் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவும் இதற்கு முன் இணைந்து பணியாற்றிய சிம்ஹா, லெஜண்ட் போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்றன. 

இதையும் படிக்க | 'டாக்டர்', 'மாநாடு' படங்களுக்கு நடுவில், சத்தமில்லாமல் ஆர்யா படம் செய்த சாதனை

தற்போது வெளியான அகாண்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு திரையரங்கில் அகாண்டா படம் பார்த்த ரசிகர்கள் ஜெய் பாலையா என்று கத்தியபடி இருந்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்களின் கூச்சல்கள் எல்லை மீறி சென்றுள்ளது. 

இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் படத்தை பாதியில் நிறுத்த சொல்லி, ரசிகர்களிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags : Akhanda Balakrishna Boyapati Srinu Theatre Fans Australia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT