செய்திகள்

'டாக்டர்', 'மாநாடு' படங்களுக்கு நடுவில், சத்தமில்லாமல் ஆர்யா படம் செய்த சாதனை

3rd Dec 2021 01:41 PM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியாகி, கரோனாவால் வீடுகளில் முடங்கியிருந்த மக்களை திரையரங்குகளுக்கு கூட்டி வந்தது. திரையரங்க உரிமையாளர்களுக்கு 'டாக்டர்' திரைப்படத்தின் வெற்றி புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.

இதனையடுத்து திரையரங்குகளில் 'அரண்மனை 3', 'அண்ணாத்த', 'எனிமி', 'மாநாடு' போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக நகைச்சுவை கலந்த திகில் படங்களுக்கு குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் 'காஞ்சனா', 'அரண்மனை' படங்கள் தொடர்ச்சியாக வந்து வெற்றிபெற்றன.

இதையும் படிக்க | சின்னத்திரை நடிகையின் புகைப்படத்தை தவறாக சித்திரித்து பகிர்ந்தவர்கள் கைது

ADVERTISEMENT

இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா போன்றோர் நடிப்பில் வெளியான 'அரண்மனை 3' படமும், ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திரையரங்கில் வெளியான இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை. இதனையடுத்து இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியானது. 

வெளியான 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து அரண்மனை 3 சாதனை படத்துள்ளதாக ஜி5 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  


 

Tags : Arya Aranmanai 3 Sundar C Sundar.C Zee 5
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT