செய்திகள்

சமீபத்தில் திருமணமான நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்

3rd Dec 2021 04:14 PM

ADVERTISEMENT

 

நடிகர் அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து அம்மா பாடலின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்: படத்தை பாதியில் நிறுத்திய ஆஸ்திரலிய திரையரங்கம்: வெளியான விடியோ

இந்த நிலையில் கார்த்திகேயாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் அஜித், அவரை போன் மூலம் தொடர்புகொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தாராம். மேலும் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளாராம். இது கார்த்திகேயாவிற்கும், அவரது மனைவி லோஹிதாவுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : Ajith Kumar Kartikeya Valimai Marriage
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT