செய்திகள்

''நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம்...'': நடிகர் சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

3rd Dec 2021 04:44 PM

ADVERTISEMENT

 

நடிகர் சூர்யா - ஜோதிகாவுடன் இணைந்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் கடந்த மாதம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு இந்திய அளவில் பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

ஜெய் பீம் திரைப்படம் சந்துரு என்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் வாழ்வில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது காவல்துறை நிகழ்த்திய வன்முறையை மிக அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் முக்கியமான படமாக அமைந்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்: படத்தை பாதியில் நிறுத்திய ஆஸ்திரலிய திரையரங்கம்: வெளியான விடியோ

நடிகர் சூர்யா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கக்தில், நிகழ்வுகளுக்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பது நமக்கு கிடைத்திருக்கும் சிறந்த சுதந்திரங்களில் ஒன்று என்ற கருத்து இடம்பெற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 
 

Tags : Jai Bhim Suriya Jyotika Instagram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT