செய்திகள்

பட்டத்தை மறுத்து ’தல போல வருமா?’ என்பதை நிரூபித்த அஜித் குமார்

சிவசங்கர்

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்றால் கிரிக்கெட் வீரராகவோ , அரசியல்வாதியாகோ , சினிமா நடிகராகவோ இருக்க வேண்டும் என்கிற பழைய ஜோக் நினைவிற்கு வருகிறது. வெறும் நகைச்சுவையா அது? மற்ற துறைகளை விடுங்கள். சினிமாவை எடுத்துக்கொண்டால் யாருக்கு புகழ் இருக்கிறோதோ அவர் படம் ஓடப் போகிறது என்றுதானே அர்த்தம்?

சரி இந்தப் புகழைப் பெற அவர்கள் உழைத்தார்கள், போராடினார்கள் என்றாலும் இத்தனை பெரிய வரவேற்பு ஒரு நடிகருக்குத் தேவைதானா என்கிற கேள்விகள் வராமல் இருக்காது.

நிலைமை அப்படி இருக்க நடிகர் அஜித்குமார் தன்னுடைய ‘தல’ பட்டத்தைத் துறப்பதாக அறிவித்து அவருடைய ரசிகர்களுக்கு வலிமையான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

ஒருபக்கம் வேதனை குரல்கள், புலம்பல்கள். மறுபுறம் சிறிய அளவிலான வரவேற்பும் இருக்கிறது. உண்மையில் இப்படி சொன்னாலும் தன் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்பது அஜித்-க்கு தெரியாததா? ஆனால் ஒரு நல்ல முன்னெடுப்பாகத் தான் இதைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இந்த நூற்றாண்டில்  சினிமா கலையைக் கொண்டாடிய அளவு வேறு எதையும் மக்கள் எட்டிக்கூட பார்த்தது கிடையாது. இத்தனை பெரிய புகழை அடையாளத்தை எந்தக் கலைஞன் கைவிடுவான்? ஆனால் நடிகர் அஜித்குமார் சத்தமே இல்லாமல் ‘தல’-யைக் கழட்டி வைத்திருப்பது ஒருவகை முன்னெடுப்பு தான். 

’கடந்த காலத்தை திரும்பிப் பாருங்க, வாழ்க்கை என்ன சொல்லித் தருது’ என்கிற வசனத்தைப் போலவே தன் வாழ்க்கையையும் அஜித் செலுத்திக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விசயம். ரசிகர் மன்றம் இருப்பது எந்த விதத்திலும் ஒரு நட்சத்திர நடிகருக்கு தலைவலியைக் கொடுக்காது. இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றத்தை தாமாக முன்வந்து அஜித் கலைத்திருப்பது அன்று பாராட்டைப் பெற்ற செயல். அதற்கடுத்து  தீவிர ரசிகர்களின் முகம் சுழிக்க வைக்கிற செயலைக் கண்டித்தும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இறுதியாக ,  வலிமை அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் பொது இடங்களில் நடந்து கொண்ட விதத்தையும் கண்டித்திருந்தார்.  

திரும்பத் திரும்ப தன் ரசிகர்களிடையே குடும்பத்தையும் தொழிலையும் பார்க்குமாறு அறிவுறுத்தி வருபவர் தான் நடிக்கும் திரைப்படங்களைத் தாண்டி எந்த செயலிலும் இறங்காதவர். இத்தனை பெரிய ரசிகர்களைக் கொண்டிருக்கிற அஜித் திடீரென ‘தல’ பட்டத்தை வேண்டாமென்று மறுத்ததற்கான காரணம் என்ன? இன்றும் அஜித் படத்திற்கு 150 கோடிக்கு மேல் வியாபாரம் இருக்கிறது. முதல் காட்சி வசூலிலும் பெரிய சாதனைகளை நிகழ்த்தியும் வருபவர்.

அரங்கம் அதிரும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு அவருடைய பேட்டியைக் கேட்டே பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி இருக்க தான் எந்த விதத்திலும் கொண்டாடப்பட வேண்டிய ஆள் இல்லை என பல வகைகளில் பொதுவெளியில் தன் செயல் மூலம் நிருபித்து வருகிறார். உண்மையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர்களும் அஜித் குமாரிடம் இருந்து கற்க வேண்டியதிருக்கிறது என  உணர வைக்கிறார்.

15 ஆண்டுகளுக்கு முன் "தல போல வருமா?" என்கிற பாடலைப் பாடிய அஜித் தற்போது ’தல’ மற்றும் வேறு பெயர்களைச் சொல்லி அழைக்க வேண்டாம் என்றிருப்பது அவருடைய கனிந்த  பண்புதான் எனத் தோன்றுகிறது. தன் ரசிகர்களும் அந்த பண்பை அடைய வேண்டும் என நினைப்பது நல்ல சிந்தனை தானே? 

முன் நடிகர் விஜய் தன்னுடைய இளைய தளபதி பட்டத்தைத் துறந்து ‘தளபதி’ ஆனார். லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு ‘அட்மேன்’னாக மாறினார். இப்படி காலத்திற்கு ஏற்றது போல பெயர்களை மாற்றி வரும் நிலையில் காலத்துக்கும் மறக்காத பெயரான ’தல’-யை வேண்டாம் என்றிருப்பது உண்மையாகவே வரவேற்கப்பட வேண்டியதுதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT