செய்திகள்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் முதல் பார்வை வெளியீடு

30th Aug 2021 11:41 AM

ADVERTISEMENT

நடிகர் விஷால் நடித்துள்ள புதிய படத்தின் முதல் பார்வை நேற்று (ஆக -29) அன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ' வீரமே வாகை சூடும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை விஷால் தயாரித்து நடித்து இருக்கிறார். 

இதையும் படிக்க | 'டிக்கிலோனா' திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியானது

நேற்று (ஆகஸ்ட் 29) விஷாலின் பிறந்த நாளன்று  பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தன்னுடைய 31 வது படத்தின் முதல் பார்வையை டிவிட்டரில் வெளியிட்டார் விஷால்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா  பணிபுரிந்து வருகிறார்.

 

 

Tags : Vishal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT