செய்திகள்

'புதிய ஆரம்பம்...' - கிடப்பில் இருந்த சிம்பு படம் மீண்டும் துவக்கம்: பிரபல ஹீரோ பகிர்ந்த புகைப்படம்

27th Aug 2021 10:08 AM

ADVERTISEMENT


சிம்புவுடன் இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குவதாக நடிகர் கௌதம் கார்த்திக் ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெற்றிபெற்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பத்து பல' படத்தில் சிம்புவும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஸடுடியோ கிரீன் சார்பாக கே,ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்' பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.

இதையும் படிக்க | அனபெல் சேதுபதி வெளியீடு தேதி அறிவிப்பு 

இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க, கலையரசன், 'அசுரன்' டிஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து பின்பு பாதியில் நின்றது. சிம்புவும் 'ஈஸ்வரன்', 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' படங்களில் என வரிசையாக படங்களில் நடிக்கத் துவங்கினார். இதனால் இந்தப் படம் மீண்டும் எப்பொழுது துவங்கும் என சந்தேகம் இருந்தது. 

இதையும் படிக்க | 'சார்பட்டா பரம்பரை'யைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்கின் ட்வீட் ரசிகர்களின் சந்தேகத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த ட்வீட்டில், ''புதிய ஆரம்பம். நீண்ட நாள் காத்திருந்த பயணத்தை இன்று முதல் துவங்குகிறேன்'' எனக் கூறி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT