செய்திகள்

'கேஜிஎஃப் 2' படத்தைக் கைப்பற்றிய பிரபல தமிழ் தொலைக்காட்சி

20th Aug 2021 11:13 AM

ADVERTISEMENT


'கேஜிஎஃப் 2' படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎஃப்'. மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையும் படிக்க | பிசாசு 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல் 

குறிப்பாக இந்தத் திரைப்படம் குறித்த மீம்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த நிலையில் 'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா நடிகர் அஜித்?

இந்த நிலையில் இந்தப் படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதன் படி 'ஜி தமிழ்', 'ஜி கன்னடா', 'ஜி தெலுங்கு', 'ஜி கேரளம்' ஆகிய தொலைக்காட்சிகளில் இந்தப் படத்தை காணலாம்.  'கேஜிஎஃப் 2' திரைப்படம் திரையரங்குகளிலேயே முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT