கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க | சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் எப்போது வெளியாகிறது தெரியுமா?
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்புக் கடவுச்சீட்டு பெற்ற மம்மூட்டி, மோகன்லால்
இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ஷிவானி இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பார் என்று கூறப்படுகிறது.