செய்திகள்

'கட்டணத்தைக் குறையுங்கள்' - புதுச்சேரி முதல்வரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை

20th Aug 2021 12:53 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்குமாறு அம்மாநில முதல்வரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார். 

'மாஸ்டர்' படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 

புகைப்படங்கள்: 

இதில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு கட்டணமாக முதலில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.28 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இதனால் சிறிய முதலீட்டில் தயாராகும் படங்கள் பாதிக்கப்படும் என்பதால் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT