செய்திகள்

நடிகர்கள் விஜய், கார்த்திக்கு பிறகு 'அண்ணாத்த' ரஜினியுடன் மோதும் வில்லன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

14th Aug 2021 04:30 PM

ADVERTISEMENT

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் நடிகர் அபிமன்யூ சிங் நடிக்கவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும்  'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, குஷ்புவும், மீனாவும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரத்துள்ளது. 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இயக்குநர் சிவாவின் பிறந்த நாளை படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். அப்போது ரஜினிகாந்த்துடன் சிவா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'அண்ணாத்த' படம் பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அபிமன்யூ சிங் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிகர் விஜய் நடித்த 'வேலாயுதம்', 'தலைவா', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகியப் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங் 'அண்ணாத்த' படத்திலும்  வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT