செய்திகள்

யூடியூப் சூப்பர்ஸ்டார் ரித்விக்கின் புதிய விடியோ: ரசிகர்கள் அமோக வரவேற்பு

14th Aug 2021 12:39 PM

ADVERTISEMENT

 


சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ரித்விக்கின் நடிப்பில் புதிய விடியோ வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளார்கள். 

ரித்து ராக்ஸ் என்கிற யூடியூப் சேனலில் ரித்விக் என்கிற 2-ம் வகுப்பு மாணவனின் நகைச்சுவை விடியோக்கள் வெளியாகி வருகின்றன. 10 நிமிடங்களுக்குக் குறைவாக உள்ள சில நகைச்சுவை விடியோக்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரித்விக். சமீபத்தில் வெளியான பிரேக்கிங் நியூஸ் என்கிற விடியோவை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. பிரேக்கிங் நியூஸில் பல வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ரித்விக். இதையடுத்து பல்வேறு ஊடகங்களில் ரித்விக்கின் பேட்டிகள் வெளியாகின. மேலும், இதுபோன்று சிறுவர்களை நடிக்க வைப்பது சரியா என்கிற விவாதமும் சமூகவலைத்தளங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் திடீர் புகழை அடைந்துள்ள ரித்விக்கின் புதிய விடியோ 2 நாள்களுக்கு முன்பு வெளியானது. ரித்விக்கின் அடுத்த விடியோவுக்காக ரசிகர்கள் காத்திருந்ததால் இதற்கு இரு நாள்களிலேயே 20 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. ராஜா, ராணி கையில் செல்போன் கிடைத்தால் என்ன நடக்கும் என்று கற்பனையாக உருவாக்கப்பட்ட கதையில் ரித்விக் நடித்துள்ளார். மன்னராகவும் காவலாளியாகவும் அரசியாகவும் மூன்று வேடங்களில் நடித்ததற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

இதையும் படிக்கநடிகை திவ்யா துரைசாமியின் சமீபத்திய புகைப்படங்கள்

இதையும் படிக்கதொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி புகைப்படங்கள்

இதையும் படிக்கஇன்ஸ்டகிராமைக் கலக்கும் கிரிக்கெட் வீரர் விஹாரி மனைவியின் புகைப்படங்கள்

இந்த விடியோவின் கமெண்ட்ஸ் பகுதியில், யாருக்கெல்லாம் ரித்துவின் புன்னகை பிடிக்கும் என்று ஒருவர் கேட்டதற்கு 14 ஆயிரம் பேர் அதற்கு லைக் அளித்துள்ளார்கள். 500 பேர் பதில் அளித்துள்ளார்கள். இந்த விடியோவுக்கு இரு நாள்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கமெண்ட் அளித்துள்ளார்கள். ரித்விக்கின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த விடியோ இன்னொரு முறை நிரூபித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT