செய்திகள்

'தயாரா இருங்க' - அஜித் படம் குறித்து வெங்கட் பிரபு அறிவிப்பு: வைரலாகும் விடியோ

12th Aug 2021 11:35 AM

ADVERTISEMENT

நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்தின் அடுத்த பாடல் குறித்து வெங்கட் பிரபு பேசும் விடியோ வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் முதல் பார்வை போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான 'வேற மாதிரி' பாடல் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், வெளியான சில தினங்களிலேயே யூடியூப் தளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையைாளர்கள் அந்த பாடலை பார்த்துள்ளது, அந்தப் பாடலின் வெற்றியை குறிக்கிறது. 

இதையும் படிங்க| அவதூறு விடியோ வழக்கு: நடிகை மீரா மிதுனுக்கு அழைப்பாணை

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் காரில் சென்றுகொண்டிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், ரசிகர்கள் 'வலிமை' இரண்டாவது பாடல் குறித்து கேட்க, அதற்கு அவர், ''வலிமை இரண்டாவது பாடலை யுவன் தயார் செய்து விட்டார். விரைவில் பாடல் வெளியாகிறது. 'மாநாடு' படத்திலும் 2வது பாடல் வருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் மற்றும் இயக்குநர் வினோத் ஆகியோருடன் நடிகர் அஜித் குமார் இரண்டாவது முறையாக 'வலிமை' படத்திற்காக இணைந்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' ரீமேக் படமாக அமைந்தது. 

இதையும் படிங்க| விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்?

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களில் தனது சொந்த கதையின் மூலம் முத்திரையை பதித்தவர் இயக்குநர் வினோத் என்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் 'வலிமை' பூர்த்தி செய்யும் என நம்புவோம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT