செய்திகள்

ஹிந்தியில் இணையத் தொடராக வெளிவரும் 'லூசிஃபர்'

11th Aug 2021 12:12 PM

ADVERTISEMENT

பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர்  மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படமான 'லூசிஃபர்' பெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் 200 கோடியைத் தொட்டதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மலையாள திரை உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்ட இப்படத்திற்கு பின் ப்ரித்விராஜ் சில படங்களைத் தயாரித்து வந்தார். 

தற்போது அவருடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில்  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'குருதி' திரைப்படம் இன்று  (ஆகஸ்ட் 11) வெளியாக இருக்கிறது.

இதையும் படிக்கஅடுத்த கோவை சரளா இவரா ? : பிரபல இயக்குநரின் கணிப்பு: உங்கள் கருத்து என்ன?

அதற்காக அளித்த பேட்டியில் 'லூசிஃபர்' படத்தை ஹிந்தியில் 8 எபிசோடு கொண்ட  இணையத் தொடராக எடுக்க இருப்பதாக ப்ரித்விராஜ் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

ADVERTISEMENT

தெலுங்கில் 'லூசிஃபர்' படத்தின் ரீமேக்கில்  நடிகர் சிரஞ்சீவி , நயன்தாரா நடிக்க இருக்கிறார்கள். அப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் .

ADVERTISEMENT
ADVERTISEMENT