செய்திகள்

இயக்குநர் சீனு ராமசாமியின் படத்தலைப்பு வெளியீடு: ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இடிமுழக்கம்’

11th Aug 2021 07:43 PM

ADVERTISEMENT

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு இடிமுழக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

யதார்த்தமான கதைக்களம் கொண்ட திரைப்படத்திற்கு பெயர்பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. நடிகர் விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | 'பீஸ்ட்' படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைகிறாரா தனுஷ் ?

நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இடி முழக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கைமேன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | நடிகர் விஜய்யின் பீஸ்ட் : யோகி பாபு சொன்ன தகவல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

ரகுநந்தன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயரை நடிகர் விஜய் சேதுபதியும், உதயநிதி ஸ்டாலினும் வெளியிட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT