செய்திகள்

கணவரைப் பிரிகிறாரா நடிகை சமந்தா? பரவும் அதிர்ச்சி செய்திகள்

11th Aug 2021 12:44 PM

ADVERTISEMENT

கணவர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா பிரியவிருப்பதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. 

இயக்குநர் கௌதம் மேனனின் 'ஏ மாயா சேசாவே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இந்தப் படம் தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற பெயரில் உருவானது. தெலுங்கில் கதாநாயகியாக நடித்தவர், தமிழ் பதிப்பில் நடிகையாகவே வருவார். 

இந்தப் படம் வெற்றிப் பெற்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சமந்தா. நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு, தனுஷ், சிவகார்த்திகேயன், பவன் கல்யாண், ரவி தேஜா, விக்ரம் என தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | அடுத்த கோவை சரளா இவரா ?: பிரபல இயக்குநரின் கணிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த சமந்தா தனது முதல் பட கதாநாயகனான நாக சைதன்யாவை காதலித்து, தெலங்கானா மாநிலத்தின் மருமகளானார். திருமணத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தனது பெயருக்குப் பின்னால் தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதையும் சேர்த்துக்கொண்டார். 

திருமணத்துக்கு பிறகு, அவர் நடித்த 'சீமராஜா', 'ஓ பேபி' , 'யூ டர்ன்' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 'ஃபேமிலி மேன்' இணையத் தொடரில் அவர் இலங்கைத் தமிழராக நடித்து விமசகர்களின் பாராட்டைப் பெற்றார். 

குறிப்பாக தனது நாக சைதன்யாவுடன் இணைந்து சமந்தா நடித்த 'மிஸ்டர்.மஜ்னு' என்ற படம் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில் அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்ற பெயரை மாற்றி, 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தை மட்டும் குறிப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க | ஹிந்தியில் இணையத் தொடராக வரும் லூசிஃபர் 

'ஃபேமிலி மேன்' தொடரில் நடிகை சமந்தாவின் நடிப்பு நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை எனவும் இதனால் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமந்தா தனது பெயரில் இருந்து கணவரின் குடும்ப பெயரை நீக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நடிகர், நடிகைகள் குறித்து சிறியதாக எதாவது பொறி கிளம்பினாலே ஊடகத்தினர் அதனை ஊதிப் பெரிதாக்கிவிடுவர். அந்த வகையில் சமந்தா தனது சுட்டுரைப் பக்கத்தில் பெயர் மாற்றியிருப்பதை, இருவரும் விரைவில் விவாகரத்து பெறவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து சமந்தாவும் நாக சைதன்யாவும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இருவரும் பிரியவிருப்பதாக வெளியாகும் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT