செய்திகள்

நடிகர் தனுஷுக்கு வரியை செலுத்த 48 மணி நேரம் கெடு : நீதிமன்றம் அதிரடி

DIN

சொகுசு காருக்கு மீதமுள்ள நுழைவு வரியை செலுத்த நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு 60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 50 சதவிகித வரியை செலுத்தி சொகுசு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அந்த காரை தனுஷ் பதிவு செய்துகொண்டார். 

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''ஒரு சோப்பு வாங்கும் சாமானியர்கள் கூட வரி செலுத்துகிறார்கள். யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார்? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை இன்று மதியம் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

அதன் படி தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், நடிகர் தனுஷ் தனது சொகுசுக் காருக்கு மீதமுள்ள 50 சதவிகித வரியை, அதாவது சுமார் ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்து 757-ஐ 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT