செய்திகள்

நெற்றிக்கண் திரைப்பட டைட்டில் பாடல் நாளை (ஆகஸ்ட் 5) வெளியீடு

4th Aug 2021 08:51 PM

ADVERTISEMENT

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க |  தனுஷ் திரைப்படத்தில் இணையும் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன்

இந்நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தின் டைட்டில் பாடல் நாளை வெளியாக உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT