செய்திகள்

தனுஷ் திரைப்படத்தில் இணையும் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன்

4th Aug 2021 07:14 PM

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் பிரபல நடிகை ப்ரியா பவானிசங்கர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 44ஆவது திரைப்படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. 

இதையும் படிக்க | எதிர்பார்ப்பைக் கிளப்பும் குருதி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அதன்படி பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர், நித்யாமேனன், ராஷிகன்னா நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'அசுரன்' படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணையும் நடிகர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மேலும் இந்தத் திரைப்படத்தின் பெயர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Priya bhavani shankar D44
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT