செய்திகள்

'முதல் 3 மாதம் மிக கடினமானது' - தாய்ப்பால் கொடுப்பது குறித்து நடிகர் நகுலின் மனைவி உருக்கம்

4th Aug 2021 05:42 PM

ADVERTISEMENT

தாய்ப்பால் கொடுப்பது குறித்து நடிகர் நகுலின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டுள்ளார். 

பிரபல தமிழ் நடிகர் நகுலிற்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகிரா என்று பெயரிட்டிருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் உலக தாய்ப்பால் வழங்கும் வாரத்தை முன்னிட்டு நடிகர் நகுலின் மனைவி தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் படிக்க | 'நான் ஏன் தாலி அணிவதில்லை?' : குக் வித் கோமாளி கனி சொல்லும் அதிரடி காரணம்

ADVERTISEMENT

அந்தப் பதிவில், எனது மகள் அகிரா பிறந்து 1 வருடமாகிறது. நான் ஒரு வருடமாக அவளுக்கு தாய்பால் அளித்து வருகிறேன். எனக்கு எப்பொழுதும் எனது கணவர் நகுல் ஆதரவாய் இருந்தார். நானும் அகிராவும் உங்களை நேசிக்கிறோம். 

குழந்தை பிறந்து முதல் நான்கு நாட்கள் எனக்கு தாய்பால் சுரக்கவில்லை. 5 வது நாள் எனக்கு தாய்ப்பால் சுரந்தது. முதல் 3 மாதங்கள் கடினமாக இருந்தது. மன அழுத்தம் மற்றும் பயம் இருந்தது. மார்பகம் அவளது மூக்கை முழுவதுமாக மறைக்குமா என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். 

4வது மாதம் நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். என்னால் அவளுக்கு அருகே படுத்து அவளுக்கு பால் கொடுக்க முடிந்தது. என்னாலும் ஓய்வெடுக்க முடிந்தது. 

இதையும் படிக்க | கதாநாயகி ஆகும் ரக்சிதா

குழந்தைக்கு பல் முளைக்கும் நாட்கள் கடினமானது. ஆனால் குழந்தைகளிடம், அவர்கள் கடிக்கும்போது வலிக்கிறது என்றுசொல்லுங்கள் .அவர்களுக்கு எதுவும் புரியாது, அவர்கள் காரணமின்றி சிரிக்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கு தெரியும். என்னை நம்புங்கள். அகிரா என்னைக் கடித்தால் நான் அவளிடம், எனக்கு வலிக்கிறது. அதனால் நான் பால் கொடுக்கமாட்டேன் என சொல்லிவிடுவேன். சில நேரம் அவள் புரிந்துகொள்வாள். சில நேரம் அழுவாள். 

தாய்ப்பால் கொடுப்பது வெறும் உணவளிப்பது மட்டுமல்ல. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். உணர்வுப் பூர்வமானதும் கூட.கழிப்பிடம் செல்ல வேண்டும் என்றால் செல்லுங்கள். சில மணி நேரம் உங்கள் குழந்தை அழுதால் பரவாயில்லை. சிலர் தாய்பால் கொடுப்பது குறித்து சில விதிமுறைகள் வைத்திருப்பார்கள்.

ஆனால், உங்கள் உடல் நிலை, ஒரு அம்மாவாக உங்களது உள்ளுணர்வைப் பொறுத்து தாய்ப்பால் அளியுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  இதனையடுத்து அவரது கணவர் நகுல்,உலகின் தலை சிறந்த அம்மா என்று கருத்து பதிவு செய்துள்ளார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT