செய்திகள்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையும் தனுஷ் - அனிருத்: கைகோர்க்கும் பிரபல இயக்குநர்

4th Aug 2021 11:58 AM

ADVERTISEMENT

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணையும் படத்தில் பிரபல இயக்குநரான பாரதிராஜா நடிக்கவுள்ளார். 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கர்ணன்',' ஜகமே தந்திரம்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தனுஷ், கதை, திரைக்கதை, வசனம் எழுத, மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இணையவிருக்கின்றனர். இந்தப் படத்தில் புதிதாக பாரதிராஜா இணைந்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT