செய்திகள்

வீட்டில் விசேஷம்? பட்டுப்புடவையில் அசத்தும் 'ரௌடி பேபி' சாய் பல்லவி - பிரபலங்கள் வாழ்த்து

DIN

நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக இளைஞர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் அவர் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றார். தமிழில் மாரி 2 படத்துக்காக இவர் தனுஷுடன் இணைந்து நடனமாடிய ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 

மொழிகள் கடந்து இந்திய அளவில் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அதிகம். யூடியூப் தளத்தில் அந்தப் பாடல் குறித்து ரசிகர்களின் கருத்துக்களை பார்த்தாலே இந்தப் பாடலின் வெற்றியை உணர்ந்துகொள்ள முடியும். பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு இந்தப் பாடலைக் காட்டியே உணவு வழங்குகின்றனர். அந்த அளவுக்கு இந்தப் பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தாத்தாவின் 85வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, தங்கை மற்றும் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மிக அழகாக இருப்பதாக ராஷி கண்ணா, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT