செய்திகள்

' வலிமை ' படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

2nd Aug 2021 12:20 PM

ADVERTISEMENT

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு பின் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது.  

இதையும் படிக்ககுழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி - குவியும் வாழ்த்து

தற்போது அப்படத்தின் முதல் பாடலை இன்று இரவு 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு  அறிவித்திருக்கிறார்கள் . படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இசைப் பிரியர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது . 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT