நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ். மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி. அவருடைய தந்தை என்.எஸ். மோகன். மதுரையில் மருத்துவராகப் பணிபுரிந்த என்.எஸ். மோகன் பிறகு கிரானைட் தொழில் ஈடுபட்டார். மாப்பிள்ளையும் நடிகருமான அருண் விஜய்க்காக ஃபெதர்டச் எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க, வா போன்ற படங்களைத் தயாரித்தார்.
உடல்நலக்குறைவால் சமீபகாலமாக அவதிப்பட்ட என்.எஸ். மோகன் இன்று காலை காலமானார்.
ADVERTISEMENT
தயாரிப்பாளர் என்.எஸ். மோகனின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.