செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பு: தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் நடிகை நயன்தாரா (படங்கள்)

27th Apr 2021 04:08 PM

ADVERTISEMENT

 

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

ADVERTISEMENT

கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். தற்போது, அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காகத் தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. 

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காகப் பிரபல நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் நயன்தாரா நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT