செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகிள் 15 ரீமேக்: படப்பிடிப்பு தொடக்கம்

20th Apr 2021 11:47 AM

ADVERTISEMENT

 

ஆயுஷ்மண் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கி 2019-ல் வெளிவந்த படம் - ஆர்டிகிள் 15. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸும் போனி கபூரின் பே வியூ பிராஜக்ட்ஸ் எல்எல்பி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

2018-ல் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ். அவர் இயக்கும் 2-வது படம் இது.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் விவேக்கின் திருவுருவப்படத்துக்குப் படப்பிடிப்புக் குழுவினர் மரியாதை செலுத்தினார்கள். இதுபற்றி உதயநிதி ஸ்டாலின், ட்விட்டரில் கூறியதாவது:

பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் ஆர்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம் என்று கூறியுள்ளார்.

Tags : Udhayanidhi Stalin Article 15
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT