செய்திகள்

சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர். மகன் பட வெளியீடு ஒத்திவைப்பு

19th Apr 2021 02:11 PM

ADVERTISEMENT

 

சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர். மகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எம்.ஜி.ஆர். மகன். 

இந்தப் படம் இந்த வாரம் வெளியாகவிருந்தது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : MGR Magan சசிகுமார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT