செய்திகள்

நடிகை ராதாவை அடித்து சித்ரவதை: காவல் உதவி ஆய்வாளா் மீது புகாா்

DIN


சென்னை: இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளா், தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக, நடிகை ராதா,விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘அடாவடி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா் சென்னை சாலிகிராமம், லோகையா தெருவில் கணவரைப் பிரிந்து தனது மகன், தாயுடன் வசித்து வருகிறாா். எண்ணூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனராம். பின்னா், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினராம்.

இந்நிலையில் வசந்தராஜா, நடிகை ராதா மீது சந்தேகபட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதில் மன வேதனை அடைந்த ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் வசந்தராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விசாரணையில், ‘வசந்தராஜா ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா,திருவான்மியூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்துபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தராஜா, தனது மனைவிக்கு தெரியாமல், ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா். கடந்த மாதம் வரை வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வசந்தராஜா, பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால் அங்கிருந்து எண்ணூா் காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்’ என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொடா் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT