செய்திகள்

தமிழ், தமிழர் நலம், தமிழ்த் தேசியம்: ஏ.ஆர். ரஹ்மானின் புதிய பாடல் பற்றி கவிஞர் தாமரை

DIN

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விரைவில் வெளியாகவிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே என்கிற தனிப்பாடலைப் பற்றி கவிஞர் தாமரை பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர் திருநாளாம் இந்நன்னாளில் மற்றுமோர் நற்செய்தி.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் 'மூப்பில்லா தமிழே தாயே' என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் அவர்கள் திடீரென்று அழைத்தார். தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும்/உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான, தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது, நீங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார். 

எழுதினேன், விரைவில் வெளியாக இருக்கிறது. 'புயல் தாண்டியே விடியல்' என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக 'மூப்பில்லா தமிழே தாயே' என்பதைத் தேர்வு செய்திருக்கிறார். 

இறுதி வடிவத்தில் நானும் இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன். 

பாடல் எழுதுமுன்பு தமிழ், தமிழர் நலம் தொடர்பான உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்தது. அதில் தமிழ்த் தேசியமும் அரசியலும் சமூகவியலும் அடக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

தமிழ்த் தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன். அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன்.
 
தயங்காமல் அள்ளி எடுத்துக் கொண்டார்.

பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது என்று எழுதியுள்ளார்.

பாடலின் டீசர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT