செய்திகள்

ஓடிடியில் நேரடியாகப் படங்களை வெளியிட்டதால் ஃபஹத் ஃபாசிலுக்கு நெருக்கடியா?

DIN

சமீபத்தில் ஃபஹத் பாசிலின் மூன்று படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானதால் அவருக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை என கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் - வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த சி யூ சூன், ஜோஜி, இருள் என மூன்று படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. சி யு சூன், ஜோஜி ஆகிய படங்கள் அமேசான் பிரைமிலும் இருள் நெட்பிளிக்ஸிலும் வெளியாகின.

இனிமேல் ஃபஹத் ஃபாசிலின் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானால் அவருடைய படங்களைத் திரையரங்குகளில் திரையிட முடியாது என கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மே 13 அன்று ஃபஹத் ஃபாசில் நடித்த மாலிக் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுபற்றி அவர்கள் தரப்பு கூறியுள்ளதாவது:

ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு முன்பே இதற்கான காரணங்கள் குறித்து எங்களிடம் ஃபஹத் ஃபாசில் விளக்கினார். அதேபோல இனிமேல் தன்னுடைய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான மோகன் லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாது என கேரள ஃபிலிம் சேம்பர் அறிவித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT