செய்திகள்

பார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

12th Apr 2021 02:05 PM

ADVERTISEMENT

 

பார்த்திபன் அடுத்து இயக்கும் இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கிய படம் - ஒத்த செருப்பு. இதற்குப் பிறகு இரவின் நிழல் என்கிற படத்தை இயக்குகிறார். ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இத்தகவலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் ரஹ்மான். ட்விட்டரில் இதன் விடியோவைப் பகிர்ந்து பார்த்திபன் கூறியதாவது:

ADVERTISEMENT

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!

Yes SIR is IN (Iravin Nizhal)
பெருமை!
அருமையில் - 3 பாடல்கள் கைவசம்
அருகாமையில் இன்னொன்று - promotional song
So...
So hhaappppyy 

எனத் தமிழ் மற்று ஆங்கிலத்தில் ட்வீட்டை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். 

ADVERTISEMENT
ADVERTISEMENT